Sunday, November 8, 2009

கவிதை வேதாளங்கள்!





இப்பொழுதேலாம் நான் எழுதும் கவிதைகளில் புதுமையாய் எதுவும் இல்லை எழுத வைத்தவள் மட்டும் தான்..


என்னை ஒன்றுமே செய்யாமல் நீ மட்டும் எப்படி!! பிடித்தவளும் பிடிக்காதவளுமாய் மாறி மாறி போகின்றாய்..



பிடியில்லா ராட்டினம் அவள் பார்வை, ஏனோ ஒவ்வொரு முறை தூக்கி எறியப்படும் போதும் சிரித்து கொண்டே விழுகிறேன்


நான் ரசிததவைகளில் இந்த பூ மட்டுமே என்னை திருப்பி கேட்டது "ஏன் அப்படி பார்கிறாய் என்னை"



என்னவள் என் காது திருகும் அழகை ரசிக்கவே நான் சேட்டை செய்ய பழகிகொண்டேன்


ஒவ்வொரு முறையும் கவிதை வேதாளங்கள் விரும்பி ஏறும் முருங்கை மரம் காதலாகவே இருக்கிறது..


உதிரா சிறகுகள்!!


"இன்னும் எழுபது ஆண்டுகள் கழித்து நீ
என்ன செய்து கொண்டிருப்பாயோ தெரியாது!
ஆனால் கண்டிப்பாக நான்,

உன் உதிர்ந்த நரை முடியெல்லாம் சேகரித்து,
ஒரு நாள்; வெள்ளை மயிலிரகென காட்டி,
உன் பொக்கை வாயில் புன்னகை பிடிங்கி கொண்டிருப்பேன்"