Sunday, November 8, 2009

கவிதை வேதாளங்கள்!





இப்பொழுதேலாம் நான் எழுதும் கவிதைகளில் புதுமையாய் எதுவும் இல்லை எழுத வைத்தவள் மட்டும் தான்..


என்னை ஒன்றுமே செய்யாமல் நீ மட்டும் எப்படி!! பிடித்தவளும் பிடிக்காதவளுமாய் மாறி மாறி போகின்றாய்..



பிடியில்லா ராட்டினம் அவள் பார்வை, ஏனோ ஒவ்வொரு முறை தூக்கி எறியப்படும் போதும் சிரித்து கொண்டே விழுகிறேன்


நான் ரசிததவைகளில் இந்த பூ மட்டுமே என்னை திருப்பி கேட்டது "ஏன் அப்படி பார்கிறாய் என்னை"



என்னவள் என் காது திருகும் அழகை ரசிக்கவே நான் சேட்டை செய்ய பழகிகொண்டேன்


ஒவ்வொரு முறையும் கவிதை வேதாளங்கள் விரும்பி ஏறும் முருங்கை மரம் காதலாகவே இருக்கிறது..


உதிரா சிறகுகள்!!


"இன்னும் எழுபது ஆண்டுகள் கழித்து நீ
என்ன செய்து கொண்டிருப்பாயோ தெரியாது!
ஆனால் கண்டிப்பாக நான்,

உன் உதிர்ந்த நரை முடியெல்லாம் சேகரித்து,
ஒரு நாள்; வெள்ளை மயிலிரகென காட்டி,
உன் பொக்கை வாயில் புன்னகை பிடிங்கி கொண்டிருப்பேன்"

Wednesday, October 14, 2009

சென்னை புரட்சி!



மதிய உணவுத்தட்டில் சோற்றுக்குள் இருந்து
மீட்கப்பட்டு; பிடிக்காத காய்கறிகளின் வரிசையில்
அமர்த்தப்பட்ட; பெயர் தெரியா பூச்சி ஒன்று கேட்டது!
"எப்படி!! மாறி விட்டாய் நீ!! "

Monday, July 20, 2009

உலர்ந்த முத்தங்கள்


நான் தவழ்ந்து நிமிர்ந்து

என் தாய் நுகர்ந்து அவளை

முத்தமிட எத்தனித்த நேரம்

என் அண்ணனும் ,அப்பனும்

எனக்கு போட்டி அங்கே!

தாளாமல் அழுதே விட்டது என் முத்தம்..

இதயத்தின் அடி சுவற்றில் உறைந்து

போன அந்த பழைய முத்தங்கள் இன்று உனக்காக!



பிறகு அவளை தான் உனக்கு தெரியுமே!

என் பள்ளி பருவத்து பக்கத்து வீட்டுக்காரி.

நான் தந்த மூன்று சிலேட்டு குட்சிகளுக்கு

பரிசாய் தந்தால் ஒரு முத்தம்,

எப்படியாவது திருப்பி தந்து விட துரத்தினேன்.

எங்கோ ஓடி ஒழிந்து கொண்டால் சதிகாரி!

இந்தா உன் சிறு வயது சக்களத்தியின் முத்தம்

அதையும் நீயே வைத்து கொள்!!




பின்பு என் பதின் வயதுகளில்

மாமன் மகளுக்கு தந்திருக்க வேண்டிய

திருட்டு முத்தங்கள் சில,

அப்படி எவளும் இல்லாததால்,

இந்தா! அவைகளும் உனக்கே!



பின் சொல்ல மறந்து விட்டேன் பார்!
உன்னை போல் பொறுமை
இல்லை உன் மகளுக்கு ,
என் மீசையை இழக்க மனமில்லாமல்
அவளுக்காய் சேமித்து வைத்திருந்த சிலநூரு
முத்தங்கள்! அவைகளும் உனக்கே!


*கடைசியாய் நேற்றிரவு நம் பேத்திக்கு
நான் தந்த முத்தம்,
ச்சீ!! எச்சி, என்று அவள்
கன்னத்தில் இருந்து பிடுங்கி
என் சட்டை பைக்குள் திணித்துச் சென்றாள்,
என் நிழலே! வேறெங்கு போவேன் நான்!
அதையும் உனக்கே தந்து விடுகிறேன் !


என் முதலும் முடிவும் உன்னால்
மட்டுமே நிரப்ப பட்டிருப்பதை
வேறெப்படித்தான் சொல்லச்சொல்கிறாய்.. என்னை!!

என் இமைக்காத சில நொடி

பார்வைக்கே அவ்வளவு அலட்டி கொள்வாயே!

இன்று உன் முகச்சுருக்கம் முழுக்க

நான் தந்த முத்தங்களுக்காகவாவது

கண் விழித்து கொள்ளேன் கண்மணியே!!!


Wednesday, March 25, 2009

எனை வாழ பணித்தவை..



  • எனக்கான என் அம்மாவின் கண்ணீர்,
  • என் பிள்ளை எனை வெல்லும் நொடி,
  • பேத்தியின் கைபிடியுள் மரணம்,
இவை மூன்றும் எனை வாழ பணித்தவை..

Tuesday, March 24, 2009

பேனா மூடி



தொட்டான்,
இதழ் பதித்தான்,
கொணரும் வரை
புணர்ந்தான் புண்ணாக்கினான்.-நான்
பெண்டாட்டியும் பேனா மூடியும்

Saturday, March 21, 2009

என் ஜன்னல் வழி உலகம்

>>கால மாற்றத்தால் கரைந்து போன
திண்ணையில் வெற்றிலை பாக்கினோடு
தெருவின் மொத்த சங்கதிகளையும்
மென்று தின்னும் இரண்டு
காது வளர்த்த பாட்டி;

>>ஆண்கள் ஆங்காங்கே அலைவது
தெரிந்தும் கூட,
பாத அசைவுகள் இடுப்பு வரை நீண்டு
வெயிலுக்காக நாணி செல்கிறாள்
இக்கால பெண்ணொருத்தி..

>>ராத்திரி மறந்ததால்
பல நிமிட முயற்சிக்கு பிறகு
தெருக்குழாயில் குடம் நிறைய
காற்றை சுமந்து போகிறாள்
எதிர் வீட்டு அத்தை.

>>கறிக்கடை குப்பையினை கிளறிச்
சோர்ந்த காகம் ஒன்று
அடுத்த வீட்டு அய்யருக்கு
அப்பாவை மாறி அமாவாசை சோறு தின்கிறது.

>>ஒட்டியிருந்த உப்பினை அவர்
உடல் நீர் கரைக்க தள்ளாடி
தள்ளி வருகிறார், பதினைந்து ஆண்டுகளாய் '
உப்'பென்று கத்திக்கொண்டு
காலியாகாத மூட்டையுடன்
ஒரு உப்புக்காரர்.

>>குப்பை வண்டிக்காரன் தாமதத்தை
தொண்டை கிழிய சொல்லிகொண்டிருந்தது ,
நிறைந்து வழிந்து ஈ மொய்த்து
கொண்டிருந்த குப்பை தொட்டி.

>>வெகு நேரமாய் அழுத்தி பிடித்திருந்த
ஜன்னல் கம்பி உறுத்தியதால்
அனிச்சையாய் கைகளை
நோட்டமிட்டதில் கம்பியின் தடமும்
என் ரசனைக்கு பலியாகி
இரு எறும்புகளின் சடலமும்,
பிரிய மனமில்லாமல் அடைத்து செல்கிறேன்

என் ஜன்னல் வழி உலகத்தை..

இதுவும் ஒன்று

ஒவ்வொரு முறையும் நான் கவிஞனாய்
பிரசவிக்கும் போதெலாம் -என் பிள்ளை
எவன் ஜாடையிலேனும் இருந்து விடுமோ
என்ற ஐயத்தில் கருக்கலைத்துவிட்ட
சில நூறு கவிதைகளில்
இதுவும் ஒன்று (கமலஹாசன்
,கண்களை ஒத்திருப்பதாக எண்ணி)..

Saturday, February 7, 2009

மனிதன்!!

மனிதன்!! மரண தண்டனையோடு பிறந்த ஆயுள் கைதி..

என்னையும் இழக்கிறேன்..


முதல் சந்திப்பு சின்ன இதழ் விரிப்பில் தொடங்கி ........
இது யார் பொருட்டோ , நானறியேன் , ஆன போதும் என் குறிப்பு இதோ.....

>>உன் அருகாமை இன்றி தொலைந்து போன இந்த காலபெறுவெளியெலாம், உன்னோடு நானிருக்கையில் நிகழ்ந்து முடிந்த நினைவு பிறள்களாய் இருந்தெழுந்து விட கூடாதா!! என்ற ஏக்கம், என் இதயத்தின் சிறு பகுதியை மட்டும் துடிப்பதற்காய் விட்டு விட்டு முழுதுமாய் அடைத்து கொண்டிருக்கிறது..

>>இந்த பொல்லா காலம் வலிகளை மட்டுமல்ல பல நேரம் உறவுகளையும் மரத்து மறக்கடித்து விடுகிறது, மறந்து மரத்தும் விட்ட அந்த நினைவுகள் சில நேரம் கண்ணமுதம் சுரக்க செய்யும்.. யாரோ யாரையோ "தம்பி!" எனும் போது..

>>உன் முகவரி தளத்தில் இருந்து ஒரேழுத்து கசிந்து விடாதா!! என்று நான் கண்புதைத்து காத்திருந்த - என் அதே மின் அஞ்சல்பெட்டியுள் உன் முழு நீள நிரலொன்று , எனக்காய் இரு நாட்கள் காத்திருக்க நேரிட்டதே!! >>வாழ்வின் இந்த பிழைப்பு போராட்டத்தால் (survival) நம் உறவுகள் பழுப்படைவதாய் என் நெஞ்சம் கனக்கிறது! வழி ஏதும் தெரிந்தால் சொல், நம் நாட்களை மீட்டு தர! உன்னை இழப்பதால் என்னையும் இழக்கிறேன்..


அக்கா!!
I MISS YOU!!

Sunday, September 14, 2008

"நான்"


நான்:
இது ஒரு முரண்பாட்டு மந்திரச்சொல்
ஆழ் மனதில் இதன் பிறப்பு
வென்றவனுக்கு தோல்வியும்
தோற்றவனுக்கு வெற்றியும் தரும்..

Tuesday, September 9, 2008

பணக்காரன்




அம்மாவின் கருப்பை மட்டுமல்ல அப்பாவின் கரங்களும் தான்;

பல நேரங்களில் சுமப்பதில் சுகம் கொள்பவை!!

Saturday, December 15, 2007

மீண்டும் என் பாரதம்!!


தடம் புதிதென மடம்பொடிபட இடமிதுவென
கும்மி அடி பெண்ணே ! கும்மி அடி !!

புதிதிதுவென புயல் வெளிவரும் -ஆங்
குபுகுபுவென அனல் சுடர் விடும்.

அன்று; சாதித்திட்டோம் என கும்மி அடி!!
புது சாவித்திட்டோம் என கும்மி அடி!!

புவி ஆனந்த சக்கரம் சுற்றுதடி
அதை ஆள்பவர் நாமென கும்மி அடி!!

ஏன் அந்த சக்கரம் நிற்குதோடி
இங்கு பாதகர் பாதகம் உற்றதோடி!!

Wednesday, December 5, 2007

என் பாரதம்.....



பூக்களை கடுக்கினும்

புலனறி துன்புனற்

இடமொரு , உள்ளென்று,

சிறார்க்கு கதை பறைவார், - இவர்

தன்னை அறிந்திலையே! -கிள்ளாய்!!

உண்மை உணர்திலையே!!!



நீதிஎன்றும் பரஞ்சோதி என்றும்

காக்கைக்கு கறியிடுவார்- கிள்ளாய்!!

பக்கம் சோருக்கே போரிடுவார்!!



பொல்லா உண்மை உணர்த்துவேன் கேளடி -கிள்ளாய்!!

சாதிகள் பேற்றல் எனப்பாடம்

செய்வார் கோனார் உரை தனிலே!!!!



மொழியென்று மொழிவதிலே

அரசியல் புனைவார் -அவர்

மெயமுகம றியோமடி - கிள்ளாய்!!

இவர் காட்சிக்கு இனியரடி!!

சிலர் பேச்சுக்கு பெரியரடி!!



நாதி அற நலிந்தொழிந்த பின்

ஊழியம் தேவையோ?? - கிள்ளாய்!!

ஊறினை திருத்துவோம் வா!!!



மதமென்றும், மொழியென்றும் ஈடிலா,

இனமென்றும் சினங்கொண்டு குணங்

கெட்டு திறியோ மினி சாதி

சந்ததிகள் சாக்கடை சகதியடி...

சூளும் மானிட முடிச்சுகள் இட்டே

மனிதம் சமைதிடுவாய்!!

நமக்கு; குண்டுகள் வேண்டாமடி

பதில் செண்டுகள் செய்திடுவாய்!!!



இனி வார்த்தை எதுக்கடி கிள்ளாய்!! - இந்த

சூலகம் செதுக்கடி!!

Thursday, November 22, 2007

புரட்சியின் மிரட்சி!!

* "உன் கால்கள் வெற்றியை நோக்கி நடக்க மறுக்கும் போது்
அதை,
வெட்டி எறிந்து விட்டு தவழ தொடங்கு.... "


*
"தோல்வி ஒரு வேல்விதான்

முயற்சி தீ மூட்டிய பிறகு"



* "அழகே! அமுதே! என்றெல்லாம் அழைக்க மாட்டேன் உன்னை

அவை அழிந்து விட கூடும்.-வாழ்க நீயும்

என் நாட்டின் துக்கத்தையும் துரோகத்தையும் போல...

அஞ்சாதே!!

நான் உன்னை திட்டவில்லை என் மண்ணை தீட்டுகிறேன்...

இன்னும் நடக்கிறது பலாத்காரமும் பயங்கரவாதமும்

பலத்த பாதுகாப்போடு...."

அக்காவுக்காக....

உலகின் மிக அழகான பாரிஸ் நகர
தெருக்களுக்கு இல்லாத ஆணவம்
உன் வீட்டுக்கு செல்லும் ஒற்றை அடி பாதைக்கு


நீ அதன் மீது நடக்கிறாயாம்......


ஒரு வரி கவிதைகள்

சுமை...

பூக்கூட சுமை தான் பூகாரி தலையில்...





கொடுமை ...

"கல்வி அமைச்சர் பெரிய தேவர் தலைமையில் இந்து நாடார் கல்லூரியில் கவிதை போட்டி தலைப்பு: "சாதி கழை எடுப்போம்" "




காதல்

மரம் துளைக்கும் வண்டுமிந்த மாம்பூவில் சிறைப்படுமாம்....

*புனர் ஜென்மம்


"இன்று அதி காலை இருவரும் சந்தித்து கொண்டோம்;
பரஸ்பரம் எங்கள் சோகங்களை
பகிர்ந்து கொள்ள நினைத்தோம்;

ஆனால்,

என் கதையை தொடங்கும் முன்பே ,,
மறைந்து போனது அந்த பனி துளி.... "



*பகல் கனவு


துயரங்களுக்கு அளவில்லை

அனாலும் தூங்காத நாள் இல்லை..

துன்பம் நிறைந்தால் தூங்கி விடுவேன்

உடனே கனவுகள் காண்பதற்காக

நாயகன் நானே அங்கு; என்னை

கரித்து கொட்டவும், எறிந்து விழவும்

ஆளில்லாத காரணத்தால் கனவுகளை காதலிக்கிறேன்

இன்றைய தூக்கம் களையும் வரை!!

~~~~~~~~~~~~~~~நான் தோழ்வியின் காதலன் !!!

தேன சுமை...

பல நண்பர்கள் சில நண்பிகளின் பாராடிற்காக
மொட்டை மாடியில் எழுதி கொண்டிருந்த
சுகமான கவிதை ஒன்று சுமை ஆகி போனது
என் அம்மா,
"படித்தது போதும் சாப்பிட வாடா கண்ணு"
என்ற போது...

~அருண்~

சிலந்தி கூடு ..


எந்தன் இருப்பிடம் தனிலோர் சிலந்தி கூடொரு கண்டேன், அழகிய கூடுதனை
அழித்திடும் நிர்ப்பந்தம்....
அதன் இரங்கல் நிமித்தம்...

"அழகு தான், நல்கலை ஆழமதான் ஆன போதும்
சிலந்தியே ஆணவம் அழித்திடு -
அக்கூட்டின் மீது; மாட்சியும் சுழற்சியும் அதிகம்தான்
ஆயினும் அது வெற்றவன் இடமென்றரிந்திலயோ
அந்த கூற்றவன் தான் உன் கூட்டின் ஆயுள் காரன் ...

ஏன்னென செப்பினேன் கேளுதி ..


அவன் கண்னதில் கலை போதை
உள்ள வரை வாழுதி உன் கூடு
கலைஞனாய் உன்னையும் கலையினாய்
உன்னதயும் எண்ணு வரை வாழுதி உன் கூடு
ஆண்டவன் படைப்பென உன்னையும
அவனுதன் உழைபென உன்னதயும்
ஏற்கு வரை வாழுதி உன் கூடு....




இவை எல்லாம் மறந்தவன் பூ்ச்சென
உன்னயு் அவன் வீட்டை
அடைக்கும் ஒட்டடை கூடென
உன்னதயும் என்றென்னு வானோ அன்று ....


உன் கூட்டடையு, வீட்டடையு, பேட்டடையு,

விட்டு பறந்தோடி எட்டி தொலைந்துபோ

இன்னொரு மூலை தேடி.....

என் காதல்....


கண்ணாமூச்சியாட நீ என் கண் மூடிய போதுதான்

கண்டு கொண்டேன் இருட்டுக்கு எத்தனை வண்ணம்........


இதில் என்ன ஆச்சர்யம்; உன்

தாவணி சிக்கிய முள் செடியில் ரோஜா பூத்ததாம் ... ...





மழையில் ஏன் தான நனைவாயோ !!!


முட்டாள் பெண்ணே தாமரையில் நீர் ஒட்டுமா??





பூஜ்யதிற்கு மதிப்பில்லையாம் கணக்கு வாத்தியார் மக்கு...

நீ உச்சரித்து போயேன் புஜ்யம் புண்ணியம் பெற்று போகட்டும்... ...


முதல் காதல்


நாளொரு முறை மட்டும் நாள்காட்டியை போல்
முகம் காட்டி சென்றிருந்தேன் கண்ணாடிக்கு,,

என் சட்டை பைக்குள் சீப்பை திணித்தவள் அவள்...

கண்ணீரும் வெறுமையும் நிறைந்திருந்த என்
கவிதை புத்தகத்தில் காதலை தினித்தவளும் தான்..
..

காவிய காதல்...



*தயக்கமாய்.....

தயக்கமாய் அன்றவள் அழகுற கவிதை
............. ஒரு சொலலென்றாள்;

பக்கமாய் இழுத்தவளின் காதோரம் சுருண்டிருந்த
.............கருமேகம் விலக்கி விட்டவள் பெயர் சொன்னேன்,

அந்தோ; செல்லமாய் சலித்து கொண்டொரு
.............நீள கவி சொல்லென்றால்;

சிந்திப்பதாய் சிறு பாவனை செய்தன்ரோ-
.............ராயிரம் முறை சொன்னேனே உன் பெயரென்றேன்..

அக்கணம் அவலொழிக்க கருதியும் இதழோரம்
.............கசிந்த அந்நெழிவுகள் உறக்க சொல்லிற்றே

..............................................அவள் நாணத்தை.......




*மைவிழியால்!!

கனிஇடை சுலைதேன் சுவையுடை இதழுடயாளே!!

தளிர்த்துடை சிறுஇடையே ; பொடிநடை நகுளே!

பனிஉடை கதிரோ்னென் நுனி பட கலைந்தோளே!

நித்தம்! நகுளாதே பித்தம் புகுவிடும் என்னுள்!!