Saturday, December 15, 2007

மீண்டும் என் பாரதம்!!


தடம் புதிதென மடம்பொடிபட இடமிதுவென
கும்மி அடி பெண்ணே ! கும்மி அடி !!

புதிதிதுவென புயல் வெளிவரும் -ஆங்
குபுகுபுவென அனல் சுடர் விடும்.

அன்று; சாதித்திட்டோம் என கும்மி அடி!!
புது சாவித்திட்டோம் என கும்மி அடி!!

புவி ஆனந்த சக்கரம் சுற்றுதடி
அதை ஆள்பவர் நாமென கும்மி அடி!!

ஏன் அந்த சக்கரம் நிற்குதோடி
இங்கு பாதகர் பாதகம் உற்றதோடி!!

Wednesday, December 5, 2007

என் பாரதம்.....



பூக்களை கடுக்கினும்

புலனறி துன்புனற்

இடமொரு , உள்ளென்று,

சிறார்க்கு கதை பறைவார், - இவர்

தன்னை அறிந்திலையே! -கிள்ளாய்!!

உண்மை உணர்திலையே!!!



நீதிஎன்றும் பரஞ்சோதி என்றும்

காக்கைக்கு கறியிடுவார்- கிள்ளாய்!!

பக்கம் சோருக்கே போரிடுவார்!!



பொல்லா உண்மை உணர்த்துவேன் கேளடி -கிள்ளாய்!!

சாதிகள் பேற்றல் எனப்பாடம்

செய்வார் கோனார் உரை தனிலே!!!!



மொழியென்று மொழிவதிலே

அரசியல் புனைவார் -அவர்

மெயமுகம றியோமடி - கிள்ளாய்!!

இவர் காட்சிக்கு இனியரடி!!

சிலர் பேச்சுக்கு பெரியரடி!!



நாதி அற நலிந்தொழிந்த பின்

ஊழியம் தேவையோ?? - கிள்ளாய்!!

ஊறினை திருத்துவோம் வா!!!



மதமென்றும், மொழியென்றும் ஈடிலா,

இனமென்றும் சினங்கொண்டு குணங்

கெட்டு திறியோ மினி சாதி

சந்ததிகள் சாக்கடை சகதியடி...

சூளும் மானிட முடிச்சுகள் இட்டே

மனிதம் சமைதிடுவாய்!!

நமக்கு; குண்டுகள் வேண்டாமடி

பதில் செண்டுகள் செய்திடுவாய்!!!



இனி வார்த்தை எதுக்கடி கிள்ளாய்!! - இந்த

சூலகம் செதுக்கடி!!

Thursday, November 22, 2007

புரட்சியின் மிரட்சி!!

* "உன் கால்கள் வெற்றியை நோக்கி நடக்க மறுக்கும் போது்
அதை,
வெட்டி எறிந்து விட்டு தவழ தொடங்கு.... "


*
"தோல்வி ஒரு வேல்விதான்

முயற்சி தீ மூட்டிய பிறகு"



* "அழகே! அமுதே! என்றெல்லாம் அழைக்க மாட்டேன் உன்னை

அவை அழிந்து விட கூடும்.-வாழ்க நீயும்

என் நாட்டின் துக்கத்தையும் துரோகத்தையும் போல...

அஞ்சாதே!!

நான் உன்னை திட்டவில்லை என் மண்ணை தீட்டுகிறேன்...

இன்னும் நடக்கிறது பலாத்காரமும் பயங்கரவாதமும்

பலத்த பாதுகாப்போடு...."

அக்காவுக்காக....

உலகின் மிக அழகான பாரிஸ் நகர
தெருக்களுக்கு இல்லாத ஆணவம்
உன் வீட்டுக்கு செல்லும் ஒற்றை அடி பாதைக்கு


நீ அதன் மீது நடக்கிறாயாம்......


ஒரு வரி கவிதைகள்

சுமை...

பூக்கூட சுமை தான் பூகாரி தலையில்...





கொடுமை ...

"கல்வி அமைச்சர் பெரிய தேவர் தலைமையில் இந்து நாடார் கல்லூரியில் கவிதை போட்டி தலைப்பு: "சாதி கழை எடுப்போம்" "




காதல்

மரம் துளைக்கும் வண்டுமிந்த மாம்பூவில் சிறைப்படுமாம்....

*புனர் ஜென்மம்


"இன்று அதி காலை இருவரும் சந்தித்து கொண்டோம்;
பரஸ்பரம் எங்கள் சோகங்களை
பகிர்ந்து கொள்ள நினைத்தோம்;

ஆனால்,

என் கதையை தொடங்கும் முன்பே ,,
மறைந்து போனது அந்த பனி துளி.... "



*பகல் கனவு


துயரங்களுக்கு அளவில்லை

அனாலும் தூங்காத நாள் இல்லை..

துன்பம் நிறைந்தால் தூங்கி விடுவேன்

உடனே கனவுகள் காண்பதற்காக

நாயகன் நானே அங்கு; என்னை

கரித்து கொட்டவும், எறிந்து விழவும்

ஆளில்லாத காரணத்தால் கனவுகளை காதலிக்கிறேன்

இன்றைய தூக்கம் களையும் வரை!!

~~~~~~~~~~~~~~~நான் தோழ்வியின் காதலன் !!!

தேன சுமை...

பல நண்பர்கள் சில நண்பிகளின் பாராடிற்காக
மொட்டை மாடியில் எழுதி கொண்டிருந்த
சுகமான கவிதை ஒன்று சுமை ஆகி போனது
என் அம்மா,
"படித்தது போதும் சாப்பிட வாடா கண்ணு"
என்ற போது...

~அருண்~

சிலந்தி கூடு ..


எந்தன் இருப்பிடம் தனிலோர் சிலந்தி கூடொரு கண்டேன், அழகிய கூடுதனை
அழித்திடும் நிர்ப்பந்தம்....
அதன் இரங்கல் நிமித்தம்...

"அழகு தான், நல்கலை ஆழமதான் ஆன போதும்
சிலந்தியே ஆணவம் அழித்திடு -
அக்கூட்டின் மீது; மாட்சியும் சுழற்சியும் அதிகம்தான்
ஆயினும் அது வெற்றவன் இடமென்றரிந்திலயோ
அந்த கூற்றவன் தான் உன் கூட்டின் ஆயுள் காரன் ...

ஏன்னென செப்பினேன் கேளுதி ..


அவன் கண்னதில் கலை போதை
உள்ள வரை வாழுதி உன் கூடு
கலைஞனாய் உன்னையும் கலையினாய்
உன்னதயும் எண்ணு வரை வாழுதி உன் கூடு
ஆண்டவன் படைப்பென உன்னையும
அவனுதன் உழைபென உன்னதயும்
ஏற்கு வரை வாழுதி உன் கூடு....




இவை எல்லாம் மறந்தவன் பூ்ச்சென
உன்னயு் அவன் வீட்டை
அடைக்கும் ஒட்டடை கூடென
உன்னதயும் என்றென்னு வானோ அன்று ....


உன் கூட்டடையு, வீட்டடையு, பேட்டடையு,

விட்டு பறந்தோடி எட்டி தொலைந்துபோ

இன்னொரு மூலை தேடி.....

என் காதல்....


கண்ணாமூச்சியாட நீ என் கண் மூடிய போதுதான்

கண்டு கொண்டேன் இருட்டுக்கு எத்தனை வண்ணம்........


இதில் என்ன ஆச்சர்யம்; உன்

தாவணி சிக்கிய முள் செடியில் ரோஜா பூத்ததாம் ... ...





மழையில் ஏன் தான நனைவாயோ !!!


முட்டாள் பெண்ணே தாமரையில் நீர் ஒட்டுமா??





பூஜ்யதிற்கு மதிப்பில்லையாம் கணக்கு வாத்தியார் மக்கு...

நீ உச்சரித்து போயேன் புஜ்யம் புண்ணியம் பெற்று போகட்டும்... ...


முதல் காதல்


நாளொரு முறை மட்டும் நாள்காட்டியை போல்
முகம் காட்டி சென்றிருந்தேன் கண்ணாடிக்கு,,

என் சட்டை பைக்குள் சீப்பை திணித்தவள் அவள்...

கண்ணீரும் வெறுமையும் நிறைந்திருந்த என்
கவிதை புத்தகத்தில் காதலை தினித்தவளும் தான்..
..

காவிய காதல்...



*தயக்கமாய்.....

தயக்கமாய் அன்றவள் அழகுற கவிதை
............. ஒரு சொலலென்றாள்;

பக்கமாய் இழுத்தவளின் காதோரம் சுருண்டிருந்த
.............கருமேகம் விலக்கி விட்டவள் பெயர் சொன்னேன்,

அந்தோ; செல்லமாய் சலித்து கொண்டொரு
.............நீள கவி சொல்லென்றால்;

சிந்திப்பதாய் சிறு பாவனை செய்தன்ரோ-
.............ராயிரம் முறை சொன்னேனே உன் பெயரென்றேன்..

அக்கணம் அவலொழிக்க கருதியும் இதழோரம்
.............கசிந்த அந்நெழிவுகள் உறக்க சொல்லிற்றே

..............................................அவள் நாணத்தை.......




*மைவிழியால்!!

கனிஇடை சுலைதேன் சுவையுடை இதழுடயாளே!!

தளிர்த்துடை சிறுஇடையே ; பொடிநடை நகுளே!

பனிஉடை கதிரோ்னென் நுனி பட கலைந்தோளே!

நித்தம்! நகுளாதே பித்தம் புகுவிடும் என்னுள்!!